திரு. ஆண்டாள் சொக்கலிங்கம் அவர்களுடன் ஒரு சந்திப்பு !

இன்று, தி.நகர் வாணி மஹாலில் – இந்து தர்மத்தில் இளைஞர்களின் பங்கு என்ற கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய திரு ஆண்டாள் சொக்கலிங்கம் மதம் கடந்து மனிதம் போற்றும் கருத்துக்களை சொல்லி உரை நிகழ்த்தினார். நடைமுறைகளும், நம்பிக்கைகளும் காலம் காலமாக மனித குலத்திற்கும், மனித குல மேம்பாட்டிற்கும் காரணமாயிருந்ததை அறிவியல் பூர்வமாக எடுத்துரைத்தார். நிகழ் உரை முழுதும் நேர்மறையான வார்த்தைகளும், கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

நூற்றாண்டுகள் கடந்த தாயார் ஆண்டாளின் நம்பிக்கையும், சமீப கால சிந்தனையாளர்களின் தொகுப்புகளான – இரகசியம் புத்தகத்தையும் ஒருங்கிணைத்து மனித மனம், மானுட ஒற்றுமை குறித்து அவர் ஆற்றிய உரை, தேவர் தொட்டு, வைத்தியநாத ஐயர், ஸ்ரீ சக்கரம், புராண கோயில் அமைப்புகளும் அதில் புதைந்துள்ள அர்த்தமுள்ள வாழ்க்கை தத்துவங்கள், இந்த மனித வாழ்க்கைக்காக மதம் வகுத்து கொடுத்த தர்மங்களை புரிந்துகொள்ள முடிந்தது. 15 வருடத்திற்கு முன்பான அவரின் நிலை, 15 வருடத்தில் தயார் ஆண்டாளின் மேல் அவர் கொண்ட நம்பிக்கையும் பக்தியும், வாழ்வின் தொடர் முன்னேற்ற நிகழ்வுகளை எடுத்துரைத்த விதம், எதிர்த்தவருக்கும் ,தூற்றியவருக்கும் நன்றி சொல்ல சொன்ன பண்பு, தர்மத்தை நிலைநாட்டும் விதமாக அமைந்தது.இந்த தர்மம் காத்து மனிதம் போற்றுவோம் !